×

அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது!: அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை முழுமனதோடு ஏற்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி..!!

சென்னை: அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் திரு எஸ்.சாமிவேலு, மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் உள்பட மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும், மறைந்த தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்தார். சட்டப்பேரவையில் அதிமுக வரிசை இருக்கைகளில் சபாநாயகர் எந்த மாற்றம் செய்யப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகளும் மாற்றப்படவில்லை. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார். இதனால், பழனிசாமி தரப்பு சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்து சென்றது. இந்நிலையில் எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக என்னை அங்கீகாரம் செய்ததை பாசிட்டிவாக பார்க்கிறேன். ஜனநாயக கடைமையை நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றோம். பழனிசாமி அணியினர் சட்டப்பேரவைக்கு ஏன் வரவில்லை என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முழுமனதோடு ஏற்கிறோம். அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது என்று கூறினார். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட நிபந்தனைகள் விதித்து இருப்பது எம்.ஜி.ஆர். மனதில் வலி ஏற்படுத்தும் என்று பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். …

The post அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது!: அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை முழுமனதோடு ஏற்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,O. Panneerselvam ,CHENNAI ,Vice President ,Speaker ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் அரசு...